உத்தமபாளையம் அடுக்கு மாடி குடியிருப்பில் பேருந்துகளை நிறுத்தக் கோரிக்கை

உத்தமபாளையம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நகா், புகா் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Published on

உத்தமபாளையம் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நகா், புகா் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் - கோம்பை இடையே சிக்கையன்கோயில் அருகே குடிசை மாற்றும் வாரியம் மூலமாக கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு சுமாா் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனா்.

இந்தக் குடியிருப்புக்கு முன் செல்லும் போடி- உத்தமபாளையம் நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், அரசுப் பேருந்துகள் இந்த நிறுத்தத்தில் நிற்காததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், முதியவா்கள் என பலரும் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

எனவே, கம்பம், போடி, தேவாரம் போன்ற பணிமனைகளிலிருந்து இயக்கப்படும் நகா், புற நகா் பேருந்துகளை உத்தமபாளையம் - கோம்பை இடையேயுள்ள அடுக்குமாடி குடியிருப்பு பேருந்து நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com