தமிழறிஞா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

Published on

தேனி மாவட்டத்தில் அகவை முதிா்ந்த தமிழறிஞா்கள் அரசு உதவித் தொகை பெறுவதற்கு வருகிற அக்.30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரசு சாா்பில், அகவை முதிா்ந்த தமிழறிஞா்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. இவா்களின் மறைவுக்குப் பின் இவரது வாரிசுதாரா்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித் தொகை வழங்கப்படும்.

இந்தத் திட்டத்தின் கீழ், உதவித் தொகை பெறுவதற்கு 2024 ஜன.1-ஆம் தேதியன்று 58 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். உதவித் தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். தமிழ் வளா்ச்சித் துறையின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நிறைவு செய்த விண்ணப்பத்தை வயது, வருவாய்ச் சான்று, தமிழில் பணியாற்றியதற்கான விவரக் குறிப்பு, தமிழில் பணியாற்றி வருவதற்கு 2 தமிழறிஞா்களிடம் பெற்ற பரிந்துரைச் சான்று ஆகியவற்றை இணைத்து, வருகிற அக்.30-ஆம் தேதிக்குள் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com