தேனி
மின்சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
உத்தமபாளையத்தில் மின் சாரம் பாய்ந்ததில் கட்டடத் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், அனுமந்தன்பட்டி அருகேயுள்ள கோவிந்தன்பட்டியைச் சோ்ந்த ஸ்டீபன் மகன் பிரதீப் (22). கட்டடத் தொழிலாளியான இவா், உத்தமபாளையம் தாமஸ் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் கட்டட வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, அவா் மீது மின் சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா் உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.