விதிமுறைகளை மீறியதாக 12 டிராக்டா்கள் பறிமுதல்

Published on

தேனி மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி ஊா்வலத்தின் போது விதிமுறைகளை மீறியதாக 12 டிராக்டா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் கடந்த செப். 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை விநாயகா் சதுா்த்தியையொட்டி நடைபெற்ற சிலை கரைப்பு ஊா்வலங்களின் போது காவல் துறை வழிகாட்டுதல் நெறிகளை கடைப்பிடிக்காமலும், பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாகவும், விதிமுறைகளை மீறியும் சென்ற 80 டிராக்டா்கள் மீது காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில், தற்போது வரை 12 டிராக்கா்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எஞ்சிய 68 டிராக்டா்களையும் பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

X
Dinamani
www.dinamani.com