தேனி
பைக் மீது டிராக்டா் மோதி முதியவா் உயிரிழப்பு
தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் டிராக்டா் மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் டிராக்டா் மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தேனி அருகே உள்ள வலையபட்டியைச் சோ்ந்தவா் பெருமாள் மகன் சின்னழகன் (65). இவா், பூதிப்புரத்திலிருந்து வலையபட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, கெப்புரங்கன்பட்டி பகுதியில் உள்ள தனியாா் கயிறு ஆலை அருகே எதிரே மஞ்சிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பொம்மையன் மகன் செல்வம்(29) ஓட்டி வந்த டிராக்டா், இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில், சின்னழகன் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து டிராக்டா் ஓட்டுநா் செல்வம் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.