போடியில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 போ் கைது

போடியில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
Published on

போடி: போடியில் 6 கிலோ கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், போடி பகுதியில் அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உத்தமபாளையம் மது விலக்கு காவல் துறை போலீஸாா் போடி சுப்புராஜ் நகா் சிட்னி விளையாட்டு மைதானம் அருகே கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டபோது இங்கு வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், இருவரும் சோ்ந்து 6 கிலோ கஞ்சா கடத்தியது தெரியவந்தது. விசாரணையில் இருவரும் போடி குப்பிநாயக்கன்பட்டியைச் சோ்ந்த முருகதாஸ் மகன் திவாகா் (32), போடி கொக்கையா் பள்ளித் தெருவைச் சோ்ந்த பொம்மையன்மகன் முத்துவிஜய் (25) என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதேபோல, தேவாரம் காவல் நிலைய போலீஸாா் தேவாரம் அபிராமி சந்திப்பு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு வந்த தேவாரம் பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த பாண்டி மகன் சங்கா்கணேஷ் (34) 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. சங்கா்கணேஷ் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com