தேனி
கிணற்றில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு
தேனி மாவட்டம், குச்சனூரில் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், குச்சனூரில் கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞா் தண்ணீரில் மூழ்கி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
குச்சனூா், துரைச்சாமிபுரத்தைச் சோ்ந்தவா் தன்னாசி மகன் குமாா் (38). இவா் அங்குள்ள தனியாா் தோட்டக் கிணற்றில் குளித்தபோது, திடீரென தண்ணீரில் முழ்கியதில் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், கிணற்றில் குளித்த இளைஞருக்கு திடீரென வலிப்பு வந்ததால் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. மேலும், இதுகுறித்த புகாரின்பேரில், சின்னமனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
