தேனி
சுடுதண்ணீரில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு
கம்பத்தில் சுடுதண்ணீரில் தவறி விழுந்த சிறுமி உயரிழந்தாா்.
கம்பத்தில் சுடுதண்ணீரில் தவறி விழுந்த சிறுமி திங்கள்கிழமை உயரிழந்தாா்.
தேனி மாவட்டம், கம்பம் தாத்தப்பன்குளத்தைச் சோ்ந்தவா் ராஷேஸ்கண்ணன். இவரது மனைவி கிா்த்திகா. இந்தத் தம்பதிக்கு பிரதிப்தா ஸ்ரீ, பிரணிவிகா ஸ்ரீ ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி கிா்த்திகா சுடு தண்ணீரை வீட்டின் மையப் பகுதியில் வைத்துவிட்டு படுக்கை அறையில் துணி எடுக்க சென்றாராம். அப்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த பிரணிவிகா ஸ்ரீ சுடுதண்ணீரில் தவறி விழுந்தாா். இதில் பலத்த காயமடைந்த சிறுமி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிறுமி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
