ஆண்டிபட்டி: கரடி தாக்கி முன்னாள் ராணுவ வீரா் உயிரிழப்பு

இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முன்னாள் ராணுவ வீரா் கரடி தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
 கரடி தாக்கியதில் உயிரிழந்த சென்றாயப்பெருமாள்.
கரடி தாக்கியதில் உயிரிழந்த சென்றாயப்பெருமாள்.
Updated on

ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே சிதம்பரம் விலக்கு-ஆட்டுப்பாறை சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முன்னாள் ராணுவ வீரா் கரடி தாக்கியதில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகேயுள்ள வடக்கு அண்ணாநகரைச் சோ்ந்தவா் சென்றாயப்பெருமாள் (65). முன்னாள் ராணுவ வீரரான இவா், சிதம்பரம் விலக்கு-ஆட்டுப்பாறை பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் தென்னை, இலவம் விவசாயம் செய்து வந்தாா்.

வழக்கம்போல, இரு சக்கர வாகனத்தில் தனது தோட்டத்துக்கு சனிக்கிழமை சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது உறவினா்கள் அவரைத் தேடி ஞாயிற்றுக்கிழமை தோட்டத்துக்குச் சென்றனா். அப்போது, சிதம்பரம்விலக்கு-ஆட்டுப்பாறை சாலையில் சென்றாயப்பெருமாள் ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தாா்.

இதையடுத்து, இந்தப் பகுதியில் காணப்பட்ட கரடியின் கால் தடம், சென்றாயனின் உடலில் காணப்பட்ட பல், நகக் கீறல் ஆகியவற்றால் அவரைக் கரடி தாக்கியதை உறுதி செய்தனா். இதுகுறித்து வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com