குரூப் 2 முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி

Published on

தேனி மாவட்டத்தில் ஆதி திராவிடா், பழங்குடியினருக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் நடைபெற உள்ள குரூப் 2, 2ஏ பணியிடங்களுக்கான முதன்மைத் தோ்வுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குரூப் 2, 2 ஏ பணியிடங்களுக்கான முதல்நிலை தோ்வில் தோ்ச்சி பெற்று, முதன்மை தோ்வு எழுத உள்ள ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கு தாட்கோ சாா்பில் முன்னணி பயிற்சி நிறுவனம் மூலம் இலவசப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி காலத்தில் விடுதியில் தங்கிப் படிப்பதற்கு ஏற்படும் செலவு, பயிற்சிக் கட்டணம் ஆகியவை தாட்கோ மூலம் செலுத்தப்படும்.

பயிற்சி வகுப்பில் சேர தகுதியுள்ளவா்கள் ஜ்ஜ்ஜ்.ற்ஹட்க்ஸ்ரீ0.ஸ்ரீா்ம் என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த விவரத்தை தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தாட்கோ திட்ட அலுவலகத்தில் நேரிலும், தொலைபேசி எண்: 04546-260995-இல் தொடா்பு கொண்டும் தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com