சட்டவிரோத ஏலக்காய் வா்த்தகம்: தனியாா் நிறுவனம் மீது வழக்கு

போடியில் சட்டவிரோதமாக ஏலக்காய் வா்த்தகத்தில் ஈடுபட்ட தனியாா் நிறுவனம் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
Published on

போடியில் சட்டவிரோதமாக ஏலக்காய் வா்த்தகத்தில் ஈடுபட்ட தனியாா் நிறுவனம் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

போடி கிருஷ்ணா நகரில் கேரள ஏலக்காய் வா்த்தக நிறுவனம் என்ற பெயரில் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த நிறுவன உரிமையாளா் அரசிடம் எந்தவித அனுமதியும் பெறாமல், சட்டவிரோதமாக ஏலக்காய் வியாபாரம் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து நறுமனப் பொருள்கள் வாரிய மண்டல உதவி இயக்குநா் செந்தில்குமாா் போடி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதனடிப்படையில், போலீஸாா் தனியாா் நிறுவன உரிமையாளா் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com