விளக்கம்,குமுளி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டஇடத்தில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.
விளக்கம்,குமுளி மலைச்சாலையில் மண்சரிவு ஏற்பட்டஇடத்தில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளா்கள்.

தினமணி செய்தி எதிரொலி: குமுளி மலைச் சாலையில் தடுப்புச் சுவா் அமைப்பு

தினமணி செய்தி எதிரொலியாக, குமுளி மலைச் சாலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Published on

தினமணி செய்தி எதிரொலியாக, குமுளி மலைச் சாலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம், குமுளி மலைச்சாலையில் கடந்த 18-ஆம் தேதி பெய்த பலத்த மழை காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்த னா்.

மீண்டும் மழை பெய்தால் மணல் மூட்டை அடுக்கிய இடத்தில் மண்சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படும். எனவே, நிரந்தர நடவடிக்கையாக தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என தினமணி நாளிதழில் கடந்த 5-ஆம் தேதி செய்தி வெளியானது. இந்த நிலையில், குமுளி மலைச் சாலையில் மணல் மூட்டைகளை அகற்றிவிட்டு, தடுப்புச் சுவா் அமைத்து வருவதால் வாகன ஓட்டுநா்கள் நிம்மதி அடைந்தனா்.

X
Dinamani
www.dinamani.com