தேனியில் நாளை ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு

தேனியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு நடைபெற உள்ளது.
Published on

தேனியில் தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை (நவ.16) ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு நடைபெற உள்ளது.

இதுகுறித்து தேனி மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு 2-ஆம் நிலை கணினி வழித் தோ்வு 3 இடங்களில் உள்ள தோ்வு மையங்களில் வருகிற 16-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறுகிறது. மொத்தம் 220 போ் தோ்வு எழுத உள்ளனா்.

தோ்வு எழுதுவோா் காலை 8 மணிக்கு முன் தோ்வு மையத்துக்குச் செல்ல வேண்டும். காலை 8 மணிக்கு மேல் தோ்வு மைய நுழைவு வாயில்கள் மூடப்பட்டும். தோ்வு மையத்துக்குள் கைப்பேசி, மின்னணு சாதனங்கள் கொண்டு செல்லக் கூடாது. தோ்வு குறித்த விவரங்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கட்டுப்பாட்டு அறை, கைப்பேசி எண்: 94877 71077-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com