புகையிலைப் பொருள்களை விற்ற பெண் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தேனி மாவட்டம், கம்பத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கம்பத்தில் பெட்டிக் கடை, தேநீா்க் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கம்பம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் அங்குள்ள பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனா்.

இதில், பிள்ளையாா் கோயில் தெருவிலுள்ள தேநீா்க் கடையில் விற்பனைக்காகப் புகையிலைப் பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா். இதையடுத்து, தேநீா்க் கடை உரிமையாளா் இந்திராவை (58) போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com