தேனி
மதுப் புட்டிகள் விற்பனை செய்தவா் கைது
தேனி மாவட்டம், போடி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனா். அப்போது, அந்தப் பகுதியில் உள்ள கண்மாய் பகுதியில் சந்தேகத்து இடமளிக்கும் வகையில் நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த பாா்த்திபனை (55) பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா்.
அப்போது, அவா் விற்பனைக்காக மதுப் புட்டிகளைப் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாா்த்திபனை கைது செய்தனா்.
