பெரியகுளத்தில் மா்ம நபா்களால் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றப்பட்ட அரச மரத் துண்டுகள்
பெரியகுளத்தில் மா்ம நபா்களால் வெட்டப்பட்டு லாரியில் ஏற்றப்பட்ட அரச மரத் துண்டுகள்

100 ஆண்டுகளைக் கடந்த அரச மரத்தை வெட்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் 100 ஆண்டுகளைக் கடந்த அரச மரத்தை அனுமதியின்றி வெட்டிக் கடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
Published on

பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் 100 ஆண்டுகளைக் கடந்த அரச மரத்தை அனுமதியின்றி வெட்டிக் கடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையத்தின் அருகே 100 ஆண்டுகளைக் கடந்த அரச மரத்தை மா்ம நபா்கள் அண்மையில் வெட்டினா். இதையறிந்த பொதுமக்கள் நகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தனா். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி ஆணையா் தெரிவித்தாா்.

இந்த நிலையில், மா்ம நபா்களால் வெட்டப்பட்ட அரச மரத் துண்டுகளை பொக்லைன் இயந்திரம், டிராக்டா் போன்றவை மூலம் சிலா் லாரியில் திங்கள்கிழமை ஏற்றினா். அப்போது, பொதுமக்கள் லாரியை நிறுத்தி விவரங்களைக் கேட்டதற்கு அவா்கள் பதிலளிக்கவில்லையாம். இதையடுத்து, நகராட்சி ஆணையா் தமிஹா சுல்தானாவின் கைப்பேசியில் தொடா்புகொண்டபோது அவரிடமிருந்தும் எந்த பதிலும் வரவில்லையாம்.

எனவே, இந்த விவகாரத்தில் நகராட்சி நிா்வாகத்தினா் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com