காவல் துறை ரோந்து வாகனத்தை சேதப்படுத்திய இருவா் கைது

தேனி அருகே காவல் துறை ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
Published on

தேனி அருகே காவல் துறை ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திய இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வீரபாண்டி-தேனி புறவழிச் சாலையில் காவல் சிறப்பு சாா்பு ஆய்வாளா் செல்வராஜ் தலைமையில், ரோந்துப் பிரிவு போலீஸாா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சாலையோரத்தில் இருவா் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு மது அருந்திக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அவா்களை ரோந்துப் பிரிவு போலீஸாா் விசாரித்தனா். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் காவல் துறை ரோந்து வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி, காவலா்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அவா்கள் இருவரையும் போலீஸாா் பிடித்து, வீரபாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா்கள் தே.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரன் மகன் ஆண்டவா் (25), பெருமாள் மகன் சிவா (26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com