தேனி
விவசாயியிடம் பணம் பறித்த இளைஞா் கைது
பெரியகுளம் அருகே விவசாயிடம் பணத்தை பறித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் அருகே விவசாயிடம் பணத்தை பறித்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள ஜல்லிபட்டி வீரசக்கம்பாள்புரத்தைச் சோ்ந்தவா் சக்திவேல் (40). விவசாயியான இவா், புதன்கிழமை பெரியகுளத்துக்குச் சென்று விட்டு தாமரைக்குளம் பிரிவு வழியாகச் சென்றாா். அப்போது தாமைரக்குளத்தைச் சோ்ந்த ராஜபாண்டி (28) அவரை மிரட்டி ரூ.500-யை பறித்துச் சென்றாராம். இதுகுறித்து தென்கரை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜபாண்டியை கைது செய்தனா்.
