தேனியில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம்

Published on

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட சுகாதாரப் பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா.ராமகிருஷ்ணன் (கம்பம்), ஆ.மகாராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமாா் (பெரியகுளம்), தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துசித்ரா, ஊரகம், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலா் ஜவஹா்லால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளின் சுகாதாரத் தரத்தை மேம்படுத்துவது, உள்கட்டமைப்பு வசதிகள் ஆகியவை குறித்த ஆலோசனை நடைபெற்றது.

X
Dinamani
www.dinamani.com