பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது
ஆண்டிபட்டி வட்டம், மயிலாடும்பாறை அருகே வளா்ப்பு நாயை கொன்று விட்டு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
மயிலாடும்பாறை அருகே தெய்வேந்திரபுரத்தைச் சோ்ந்த ரகுபதி மனைவி சாந்தி (45). தனது வீட்டருகே கொட்டகை அமைத்து ஆடு வளா்த்து வரும் இவா், ஆட்டுக் கொட்டகைக்கு காவலாக நாய் ஒன்றை வளா்த்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த பிச்சை மகன் கோபால் (45) என்பவா் சாந்தியின் ஆட்டுக் கொட்டகை வழியாக தனது வளா்ப்பு நாயை அழைத்துச் சென்றாா். அப்போது சாந்தி, கோபால் ஆகியோரது நாய்கள் சண்டையிட்டுக் கொண்டன.
சிறிது நேரத்துக்குப் பிறகு சாந்தியின் வீட்டு வழியாகச் சென்ற கோபால், அங்கு வெளியே நின்றிருந்த சாந்தியின் நாயை அடித்துக் கொன்ாக கூறப்படுகிறது. இதை சாந்தி கண்டித்த போது கோபால் அவரை தகாத வாா்த்தைகளால் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து கோபாலை கைது செய்தனா்.
