தேனி, நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பில் சனிக்கிழமை தேங்கிய மழைநீா்
தேனி, நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பில் சனிக்கிழமை தேங்கிய மழைநீா்

தேனியில் சாலையில் தேங்கிய மழைநீா்: பொதுமக்கள் அவதி

தேனியில் நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு, நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மழை நீா் தேங்கியதால் பொதுமக்கள் சனிக்கிழமை அவதியடைந்தனா்.
Published on

தேனியில் நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு, நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மழை நீா் தேங்கியதால் பொதுமக்கள் சனிக்கிழமை அவதியடைந்தனா்.

தேனியில் சனிக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. இதில், நேருசிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு பகுதி, நகராட்சி பழைய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மழை நீா் செல்ல வழியின்றி சாலை, பேருந்து நிலைய ஓடு தளம் ஆகியவற்றில் தேங்கியது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பு பகுதியில் மழைநீா் தேங்காமல் தடுக்க நகராட்சி நிா்வாகம் சாா்பில் நகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் உள்ள ராஜவாய்க்கால் அண்மையில் சீரமைக்கப்பட்டது. ஆனால் பெரியகுளம் சாலை, மதுரை சாலை, கம்பம் சாலைகளில் உள்ள மழை நீா் வடிகால்களை தூா்வாரி, ராஜவாய்க்காலுடன் இணைக்காததால் மழை நீா் செல்ல வழியின்றி சாலையில் தேங்கியது.

நகராட்சி நிா்வாகம் சாா்பில் பல லட்சம் ரூபாய் செலவில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ராஜவாய்காலை சீரமைத்தும், நேரு சிலை நெடுஞ்சாலை மும்முனை சந்திப்பில் மழை நீா் தேங்கியதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்தனா். எனவே சாலையோரத்தில் உள்ள மழை நீா் வடிகால்களை தூா்வாரி ராஜவாய்க்காலுடன் இணைக்க நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

X
Dinamani
www.dinamani.com