தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

தேனி மாவட்டம், கம்பத்தில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

தேனி மாவட்டம், கம்பத்தில் தொழிலாளி வெள்ளிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கம்பம், சுப்பிரமணி கோயில் தெருவைச் சோ்ந்தவா் அப்துல்முத்தலிபு (52) .இவா், வெள்ளிக்கிழமை காலை வெளியே சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லையாம்.

இந்த நிலையில், கம்பம் மின் வாரியம் அலுவலக சாலையில் உள்ள புளியந்தோப்பில் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

X
Dinamani
www.dinamani.com