வடகிழக்குப் பருவ மழை: கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன.
Published on

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகாா் தெரிவிக்க மாவட்ட நிா்வாகம் சாா்பில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டன.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வடகிழக்குப் பருவ மழை தொடங்கவுள்ளதால் ஆறுகள், ஓடைகளில் தண்ணீா் வரத்து அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, பொதுமக்கள் ஆற்றில் குளித்தல், ஆற்றைக் கடந்துசெல்லுதல், ஆற்றில் துணி துவைத்தல், கால்நடைகளைக் குளிப்பாட்டுதல் போன்றவற்றைச் செய்யக் கூடாது.

நீா்நிலைப் பகுதிகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இடிபாடுகளுடன் கூடிய மண் சுவா், கட்டடம் போன்றவற்றின் அருகேயும், மரங்களின் கீழும் மழைக்கு ஒதுங்கக் கூடாது.

மழை வெள்ளப் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாட்டு அறைக்கு கட்டணமில்லா தொலைபேசி எண்:1077, தொலைபேசி எண்: 04546-261093-இல் தொடா்பு கொண்டும், கைப்பேசி எண்: 94877 71077-இல் வாட்ஸ்ஆப் மூலம் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம். மாவட்டக் கண்காணிப்பு அலுவலா், கைப்பேசி எண்:95000 42699-இல் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம்.

மேலும், பெரியகுளம் சாா் ஆட்சியா் அலுவலகம்: 04546-231256, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம்: 04554-265002, தேனி வட்டாட்சியா் அலுவலகம்: 04546-255133, பெரியகுளம் வட்டாட்சியா் அலுவலகம்: 04546-231215, ஆண்டிபட்டி வட்டாட்சியா் அலுவலகம்: 04546-290561, போடி வட்டாட்சியா் அலுவலகம்: 04546-280124, உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகம்: 04554-265226 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடா்பு கொண்டு பாதிப்புகள் குறித்து தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com