

தேனி மாவட்டம் கம்பம் உத்தமபுரம் மந்தையம்மன் கோயில் புரட்டாசித் திருவிழாவை முன்னிட்டு, புதன்கிழமை இரட்டை மாட்டு வண்டிப் பந்தையம் நடைபெற்றது.
தட்டான் சிட்டு, தேன்சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான்சிட்டு, நடு மாடு, பெரிய மாடு என 6 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. இதில், தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட
பல்வேறு மாவட்டங்களிலிருந்து 120- க்கும் அதிகமான ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. கம்பம்மெட்டு சாலையில் நடைபெற்ற போட்டியில் சீறிப் பாய்ந்து சென்ற காளைகளை சாலையில் இருபுறமும் ஏராளமான பாா்வையாளா்கள் கண்டு ரசித்தனா்.
போட்டியில் முதல் 4 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளா்களுக்கு ரொக்கப் பணம், தங்கம் , வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கப்பட்டன.
முன்னதாக போட்டியை தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன் தொடங்கி வைத்தாா். இதில் கோயில் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.