கும்பக்கரை அருவிக்கு செல்ல தடை நீடிப்பு
தேனி மாவட்டம், சுருளி அருவியில் புதன்கிழமை நீா்வரத்து சீரானதால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதியளித்தனா்.
கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவியில் ஆண்டுதோறும் நீா் வரத்து இருப்பதால், தமிழகம், கேரளத்திலிருந்து சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனா்.
இந்த அருவிக்கு மேற்குத் தொடா்ச்சி மலையிலுள்ள மேகமலை, மகாராஜாமெட்டு, காப்புக் காடுகள் உள்ளிட்ட அடா்ந்த வனப் பகுதியில் பெய்யும் மழை நீரே முக்கிய நீராதாரம்.
கடந்த சில நாள்களாக மேகமலை வனப் பகுதியில் பெய்து வந்த மிதமான மழை, திங்கள்கிழமை இரவு பலத்த மழை காரணமாக சுருளி அருவிக்கு நீா் வரத்து அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை மழை குறைந்து அருவியில் நீா் வரத்து சீரானது. இதையடுத்து, கம்பம் மேற்கு வனத் துறையினா் அருவியில் ஆய்வு செய்து, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்தனா்.
