கும்பக்கரை பகுதியில் பறிக்கப்பட்ட வாழை இலைகளை சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட விவசாயி.
கும்பக்கரை பகுதியில் பறிக்கப்பட்ட வாழை இலைகளை சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட விவசாயி.

பெரியகுளம் சந்தையில் வாழை இலை விலை சரிவு: கட்டு ரூ. 200-க்கு விற்பனை

கும்பக்கரை பகுதியில் பறிக்கப்பட்ட வாழை இலைகளை சந்தைக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்ட விவசாயி.
Published on

பெரியகுளம் சந்தையில் விலை சரிந்ததால் வாழை இலை கட்டு ஒன்று ரூ.200- க்கு வெள்ளிக்கிழமை விற்பனையானது.

பெரியகுளம் பகுதியில் குள்ளப்புரம், ஜெயமங்கலம், மேல்மங்கலம், வடுகபட்டி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. அந்தப் பகுதியில் விளைவிக்கப்படும் வாழை இலை பெரியகுளம், தேனி, வத்தலக்குண்டு, மதுரை சந்தைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.

கடந்த ஆவணி மாதம் வாழை இலை கட்டு ஒன்று ரூ.2 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்போது, புரட்டாசி மாதத்தில் திருமண நிகழ்வுகள் குறைந்ததால் கட்டு ஒன்று ரூ.200- க்கு விற்பனையாகிறது.

இதுகுறித்து குள்ளப்புரத்தைச் சோ்ந்த செல்லப்பாண்டியன் கூறியதாவது:

ஆவணி மாதத்தில் கட்டு ஒன்று ரூ.3 ஆயிரத்தில் தொடங்கி படிப்படியாக குறைந்து ரூ. 2 ஆயிரம் வரை விற்பனையானது. ஆனால், தற்போது கட்டு ஒன்று ரூ.200-க்கு விற்பனையாகிறது. எனவே வாழை இலைக்கு சீரான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com