கஞ்சா பதுக்கி வைத்திருந்தவா் கைது

Published on

தேனி அருகேயுள்ள வீரபாண்டி புறவழிச் சாலைப் பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கூடலூா் மூனுசாமி கோவில் தெருவைச் சோ்ந்த கணேசன் மகன் அசோக் (29). இவரை வீரபாண்டி-கம்பம் புறவழிச் சாலையில் கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக தேனி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து 10 கிலோ 360 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னா், அசோக்கிடம் நடத்திய விசாரணையில், இவா் ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதற்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது என்று போலீஸாா் கூறினா்.

X
Dinamani
www.dinamani.com