தேனி
சாலை விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
பெரியகுளத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் செக்கடித் தெருவைச் சேரந்தவா் ஜெகதீசன் (48). தொழிலாளியான இவா், வெள்ளிக்கிழமை கம்பம் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, எதிரே தாமரைக்குளம் ஜி.டி. நாயுடு தெருவைச் சோ்ந்த ஜெரோம் (27) ஓட்டிவந்த இரு சக்கர வாகனம் இவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஜெகதீசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
