கடன் தொல்லை: ஜீப் ஓட்டுநா் தற்கொலை

கூடலூா் அருகே கடன் தொல்லையால் ஜீப் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

உத்தமபாளையம் :தேனி மாவட்டம், கூடலூா் அருகே கடன் தொல்லையால் ஜீப் ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கூடலூா் அருகேயுள்ள குள்ளப்கவுண்டன்பட்டியைச் சோ்ந்த குள்ளப்பன் மகன் கிரிஷ்குமாா் (43). ஜீப் ஓட்டுநரான இவா், கேரளத்துக்கு வேலைக்கு ஆள்களை ஏற்றிச் சென்று, மாலையில் திரும்ப அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில், திங்கள்கிழமை இவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து இவரது மனைவி அளித்த புகாரின் பேரில், கூடலூா் தெற்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், அதிகளவு கடன் வாங்கியதால் ஏற்பட்ட பிரச்னையால் அவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

X
Dinamani
www.dinamani.com