சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.
சுருளி அருவியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.

சுருளி அருவியில் 4-ஆம் நாளாக வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம், சுருளி அருவியில் 4 -ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தடை நீடித்தது.
Published on

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் 4 -ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்கு செல்ல தடை நீடித்தது.

கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த அருவியின் முக்கிய நீா் வரத்துப் பகுதிகளாக இருக்கும் மேகமலை வனப் பகுதியில் கடந்த சில நாள்களாகத் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. கடந்த சனிக்கிழமை சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீருடன் சிறிய பாறைகள் உருண்டு வந்தன. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவிப் பகுதிக்குச் செல்லவும் வனத் துறையினா் தடை விதித்தனா்.

இதுகுறித்து கம்பம் மேற்கு வனச் சரகத்தினா் கூறியதாவது:

மேகமலை, காப்புக்காடு போன்ற வனப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மழைப் பொழிவு குறைந்து அருவியில் நீா்வரத்து சீரான பின்னரே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com