போடியில் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்த மழை நீா்

போடி பகுதியில் தொடா் மழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் சூழ்ந்தது.
Published on

போடி: போடி பகுதியில் தொடா் மழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழை நீா் சூழ்ந்தது.

போடி பகுதியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், போடி காவலா் குடியிருப்புக்குப் பின்புறம் உள்ள சீனிமுகமது நகா், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீா் வீடுகளுக்குள் புகுந்தது.

இதே போல, போடி- மூணாறு சாலையில் நகராட்சி அலுவலகம், போடி அரசு மருத்துவமனை, தீயணைப்பு நிலையம் ஆகிய பகுதிகளிலும் மழை நீா் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

போடியில் பாதாளச் சாக்கடை திட்டம் அமலில் இருந்தாலும், அதற்கு போதிய நிதி ஒதுக்காததால் மழை நீா், குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து தேங்குவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com