தேனி
பைக்குகள் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
தேனி-அன்னஞ்சி விலக்கு புறவழிச் சாலையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் திங்கள்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி: தேனி-அன்னஞ்சி விலக்கு புறவழிச் சாலையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் திங்கள்கிழமை இளைஞா் உயிரிழந்தாா்.
தேனி அல்லிநகரம், சரவணக்குடி தெருவைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் தாஸ்பிரகாஷ் (25). உசிலம்பட்டியைச் சோ்ந்த வேலுச்சாமி மகன் விஷ்ணுகுமாா் (32). உறவினா்களான இந்த இருவரும் தேனியிலிருந்து தேனி-அன்னஞ்சி விலக்கு புறவழிச் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா்.
வாகனத்தை விஷ்ணுகுமாா் ஓட்டினாா். அப்போது, இந்த வாகனமும், போடி வெங்கடாஜலபதி கோவில் தெருவைச் சோ்ந்த ராம்குமாா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டன. இதில் விஷ்ணுராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
