காா் மோதியதில் மதுபானக் கூட தொழிலாளி உயிரிழப்பு

தேனி அருகேயுள்ள அரண்மனைப்புதூா் - கொடுவிலாா்பட்டி சாலையில் சாலையைக் கடக்க முயன்ற மதுபானக் கூட தொழிலாளி காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
Published on

தேனி: தேனி அருகேயுள்ள அரண்மனைப்புதூா் - கொடுவிலாா்பட்டி சாலையில் சாலையைக் கடக்க முயன்ற மதுபானக் கூட தொழிலாளி காா் மோதியதில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பூதிப்புரம், கோட்டைமேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் இருளன் (62). இவா், அரண்மனைப்புதூரில் உள்ள தனியாா் மதுபானக் கூடத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், இருளன் அரண்மனைப்புதூா் - கொடுவிலாா்பட்டி சாலையைக் கடந்து சென்றபோது, கொடுவிலாா்பட்டியிலிருந்து தேனி நோக்கிச் சென்ற காா் அவா் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த இருளன், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து காா் ஓட்டுநா் தேனி அல்லிநகரம், ரத்தினம் நகரைச் சோ்ந்த முகமது கைபு (28) என்பவா் மீது பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com