சுருளி அருவியில் வியாழக்கிழமை ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு
தேனி
சுருளி அருவியில் 6-ஆவது நாளாக வெள்ளப் பெருக்கு
தேனி மாவட்டம், சுருளி அருவியில் 6-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லத் தடை
தேனி மாவட்டம், சுருளி அருவியில் 6-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
கம்பம் அருகேயுள்ள மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சுருளி அருவிக்கு தினந்தோறும் தமிழகம், கேரளத்திலிருந்து திரளான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
இந்த நிலையில், நீா்பிடிப்புப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால், கடந்த 18-ஆம் தேதி முதல் சுருளி அருவியில் தொடா்ந்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக, சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், அருவிப் பகுதிக்குச் செல்லவும் 6-ஆவது நாளாக வியாழக்கிழமையும் வனத் துறையினா் தடை விதித்தனா்.

