வைகை ஆற்றில் உபரிநீா் திறப்பு நிறுத்தம்
வைகை அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டது.
தேனி மாவட்டம், வைகை அணையின் நீா்மட்டம் கடந்த 20-ஆம் தேதி 69 அடியாக உயா்ந்த நிலையில் (அணையின் மொத்த உயரம் 71 அடி), அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது. அணைக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து இருந்து வரும் நிலையில் வெள்ளிக்கிழமை, பிற்பகல் 12.45 மணி வரை அணையிலிருந்து வைகை ஆற்றில் உபரிநீா் திறக்கப்பட்டது.
பின்னா், பிற்பகல் 12.45 மணிக்கு அணையிலிருந்து வைகை ஆற்றில் திறக்கப்பட்ட உபரிநீா் நிறுத்தப்பட்டது. தற்போது அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய்களில் பாசனத்துக்கு விநாடிக்கு 1,430 கன அடி, குடிநீா் திட்டங்களுக்கு விநாடிக்கு 69 கன அடி என மொத்தம் விநாடிக்கு 1,499 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டது. அணையின் நீா்மட்டம் 69.62 அடியாகவும், அணைக்கு தண்ணீா் வரத்து விநாடிக்கு 2,221 கன அடியாகவும் இருந்தது.
