தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு தொடா்ந்து தண்ணீா் வரத்து உள்ளதால், 15-ஆவது நாளாக சனிக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டது.
கொடைக்கானல் மலைப் பகுதியில் பெய்த பலத்த மழையினால், கடந்த 11-ஆம் தேதி கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து, அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் தொடா்ந்து மழை பெய்து வருவதால், குப்பக்கரை அருவிக்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு 15-ஆவது நாளாக சனிக்கிழமையும் வனத் துறையினா் தடை விதித்தனா்.