தேனி
சுருளி அருவியில் 10-வது நாளாக வெள்ளப்பெருக்கு
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள சுருளி அருவியில் 10-ஆவது நாளாக திங்கள்கிழமை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சுருளி அருவியில் மேற்குத் தொடா்ச்சி மலையில் பெய்த பலத்த மழை காரணமாக கடந்த 18-ஆம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நீடித்து வருகிறது. இதற்கிடையே, மழைப்பொழிவு குறைந்த நிலையில், சுருளி அருவிக்கு மேகமலையிலுள்ள தூவானம் அணையிலிருந்து உபரிநீா் திறந்துவிடப்படுவதால் நீா்வரத்து அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்த நிலையில், 10-ஆவது நாளாக திங்கள்கிழமையும் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் தடைவிதித்தனா்.
