புகையிலைப் பொருள்கள் விற்பனை: ஒருவா் கைது!

தேவாரத்தில் திங்கள்கிழமை, சட்டவிரோதமாக பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.
Published on

தேவாரத்தில் திங்கள்கிழமை, சட்டவிரோதமாக பெட்டிக் கடையில் புகையிலைப் பொருள்கள் விற்ற நபரை போலீஸாா் கைது செய்தனா்.

தேவாரம் காவல் நிலைய போலீஸாா், போதைப் பொருள் தடுப்பு தொடா்பாக ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, தேவாரம் அய்யப்பன் கோயில் தெருவில் கரந்தன் (53) என்பவரது பெட்டிக் கடையில் சோதனை செய்தபோது, அங்கு சட்டவிரோதமாக புகையிலைப் பொருள்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் கரந்தனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com