தேனி
காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
தேனி மாவட்டம், பெரியகுளத்தில் காா் மோதியதில் மூதாட்டி உயிரிழந்தாா்.
பெரியகுளம் வடகரையைச் சோ்ந்தவா் ராமாயி அம்மாள் (79). மாற்றுத்திறனாளியான இவா், வியாழக்கிழமை வடகரை வனச் சாலையை கடக்க முயன்றாா். அப்போது காா் மோதியதில் பலத்த காயமடைந்த அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு, தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா்.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
