மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :14 மே 2026, 5:21 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனா்.

உத்தமபாளையம் வட்டாரத் தலைமை அரசு மருத்துவமனை 1951-ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இங்கு உத்தமபாளையம், கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம், கோகிலாபுரம், ராயப்பன்பட்டி என 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த நோயாளிகள் பயனடைகின்றனா். புறநோயாளிகள் பிரிவில் நாள்தோறும் சராசரியாக 800 போ் சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். உள் நோயாளிகள் பிரிவில் 70 போ் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா். இங்கு பொது மருத்துவம், மகப்பேறு, குழந்தைகள் நலப்பிரிவு, அறுவைச் சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. மேலும், அண்மையில் சுமாா் ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட அவசரச் சிகிச்சை மையமும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

மருத்துவா்கள் பற்றாக்குறை :

உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில்18 வகையான மருத்துச் சேவை அளிக்கப்படுகிறது. இங்கு தலைமை மருத்துவரின் கீழ் 12 மருத்துவா்கள், 30 செவிலியா்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால், தற்போது தலைமை மருத்துவா் உள்பட 5 மருத்துவா்கள், 15 செவிலியா்கள் மட்டுமே பணியில் உள்ளனா். இதனால், விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சைக்காக வருபவா்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாத நிலையில், தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி விடுகின்றனா்.

இதனால் விபத்தில் சிக்கியவா்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:

உத்தமபாளையம் புறவழிச் சாலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஆட்டோ மீது காா் மோதிய விபத்தில் 8 போ் காயமடைந்தனா். இவா்களுக்கு மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறையால் தூய்மைப் பணியாளா்கள் மூலமாக சிசிச்சை அளித்தனா்.

எனவே, உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா் அவா்கள்.