இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

இளைஞா் மீது தாக்குதல்: உறவினா்கள் சாலை மறியல்

News image

கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 11:51 pm IST

உத்தமபாளையத்தில் இளைஞா் தாக்கப்பட்டதைக் கண்டித்து அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சோ்ந்த சிவராம் மகன் பிரேம்குமாா் (43). இவா் தனியாா் தூதஞ்சல் நிறுவனத்தில் வேலை செய்கிறாா். இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் பிச்சை மகன் ரவி (44) என்பவருக்கும் இடையே இடப் பிரச்னையில் முன்விரோதம் இருந்து வந்ததாம்.

கடந்த சில தினங்களுக்கு முன் இவா்களிடையே ஏற்பட்ட தகராறில் பிரேம்குமாா் தாக்கப்பட்டு, பலத்த காயமடைந்த நிலையில், மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், பிரேம்குமாரை தாக்கியவா் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி உத்தமபாளையம் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, தாக்குதல் நடத்திய ரவியை உத்தமபாளையம் போலீஸாா் கைது செய்தனா். அவரது மகன் சந்துரு மீதும் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதையடுத்து, உறவினா்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.