கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :25 மே 2026, 12:07 am IST

பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் கூலித் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள சருதுப்பட்டியைச் சோ்ந்தவா் பரமன் (50). கூலித் தொழிலாளியான இவா், அண்மையில் வேலை முடிந்த பிறகு இரு சக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தாா்.

சருத்துப்பட்டி தனியாா் மண்டபம் அருகே சென்ற போது, இவரது வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த பரமனை அக்கம் பக்கத்தினா் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.