சுடச்சுட

  

  அருப்புக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: ஒருவர் சாவு

  By அருப்புக்கோட்டை  |   Published on : 01st June 2016 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அருப்புக்கோட்டை அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

   விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே குருந்தமடம் கிராமத்தில் மீனாட்சிசுந்தரம் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது.

   இங்குள்ள மூலப்பொருள்கள் கிடங்கில் செவ்வாய்க்கிழமை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.

   இதில், அங்கு வேலை பார்த்து வந்த வலையபட்டியைச் சேர்ந்த குட்டியான்(30) தீயில் கருகி உயிரிழந்தார்.

   ஆலையின் போர்மேன் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மணிகண்டன்(38),  தொழிலாளர்கள் கட்டனார்பட்டியைச் சேர்ந்த ராஜகுரு(43), குருந்தமடத்தைச் சேர்ந்த முத்துராஜா(47) ஆகியோர் பலத்த தீக்காயம் அடைந்தனர்.

    தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் குட்டியானின் சடலத்தை மீட்டனர். மேலும் பலத்த தீக்காயமடைந்த மூவரையும் அருப்புக்கோட்டை அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மூவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

   இதுகுறித்து பந்தல்குடி காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai