சுடச்சுட

  

  கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 வகுப்பு தொடங்க வேண்டும்: மாணவர்கள் ஆட்சியரிடம் மனு

  By விருதுநகர்  |   Published on : 01st June 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அதே பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு தொடர்ந்து படிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோருடன் வந்து, மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.

  விருதுநகர் அரசு மருத்துவமனை அருகே தனியார் இடபத்தில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. 2011 இல் தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ளது. 100 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வில்லிபத்திரி அருகே இப்பள்ளி புதிய கட்ட கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

  இப்பள்ளியில் இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய 36 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால், மேல்நிலை வகுப்புகள் இப்பள்ளியில் இல்லை. மாணவர்களை மாற்றுச்சான்றிதழ் பெற்று வேறு பள்ளிகளில் சேர்ந்து கொள்ளுமாறு நிர்வாகம் கூறுவதாகத் தெரிகிறது.

  இதையடுத்து, இப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை பெற்றோருடன் வந்து மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் மனு அளித்தனர்.

  அதில் கூறியிருப்பதாவது: கடந்த 6 ஆண்டுகளாக முறையான கட்டடமின்மை, போதிய ஆசிரியர்களின்றி, விளையாட்டு மைதானம் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி அனைத்து மாணவர்களும் பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளோம். பிளஸ் 1 வகுப்பு தொடங்குவதற்காக கடந்த 3 மாதமாக பல்வேறு மனுக்கள் அளித்தோம். இன்னமும் தொடங்கப்படவில்லை. இதனால் எங்களது நிலை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, உடனடியாக பிளஸ்1 வகுப்பு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளனர்.

  மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமன் கூறியதாவது: பிளஸ் 1 வகுப்பு இல்லாதது குறித்து தற்போது தான் தெரியவந்துள்ளது. மாணவர்கள் நலன் கருதி சென்னையில் உள்ள கேந்திரிய பள்ளி அதிகாரிகளுடன் பேசியுள்ளேன். பிளஸ் 1 வகுப்பு தொடங்குவதற்கு திட்ட அறிக்கை அனுப்புமாறு கூறியுள்ளனர். அறிக்கையை விரைந்து அனுப்பி பிளஸ் 1 வகுப்பு தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai