திருத்தங்கல் நகர் மன்றக் கூட்டம்
By சிவகாசி | Published on : 01st June 2016 12:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
திருத்தங்கல் நகர் மன்றக்கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. நகர்மன்றத் தலைவி லட்சுமி கணேசன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பொன்சக்திவேல் முன்னிலை வகித்தார். 6-ஆவது முறையாக பதவியேற்றுள்ள தமிழக முதல்வருக்கு வாழ்த்துத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்ற உறுப்பினர் கோயில் பிள்ளை பேசும்போது, பழுதாகியுள்ள கைப்பம்புகளையும், ஆழ்துளைக் கிணறு மோட்டார்களையும் உடனடியாக சீரமைக்க கேட்டுக்கொண்டார். கூடுதல் துப்பரவு பணியாளர்களை நியமிக்குமாறு உறுப்பினர் குருசாமியும் கோரினார்.
கடம்பன்குளம் மயானத்திற்கு சாலை வசதி மற்றும் தண்ணீர் வசதி செய்து கொடுக்க ரூ 10 லட்சமும், 3-ஆவது வார்டு எம்.ஜி.ஆர். காலனியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து குழாய் பதிக்க ஆகும் ரூ.2.50லட்சமும் நகராட்சி நிதியிலிருந்து ஓதுக்கீடு செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பொறியாளர் எஸ்.சுரேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.