சுடச்சுட

    

    மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்: ஆட்சியரிடம் திமுக எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

    By விருதுநகர்  |   Published on : 01st June 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகரில் மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் கோரிக்கை விடுத்ததாக, திமுக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

    விருதுநகர் மாவட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தங்கப்பாண்டியன், ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் ஆகியோர் செவ்வாய்க்கிழமை ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் வே. ராஜாராமனை செவ்வாய்க்கிழமை சந்தித்தனர்.

     பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியது: விருதுநகர் ராமமூர்த்தி சாலை மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மாவட்டத்தில் சேதமடைந்துள்ள கிராமப்புற சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     விருதுநகர், சாத்தூர் நகராட்சிப் பகுதிகளுக்கு வரும் தாமிரவருணி கூட்டுக் குடிநீர் திட்டத்தை கிராமப் பகுதிகளுக்கும் விரிவு படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வே. ராஜாராமனிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai