Enable Javscript for better performance
ராஜபாளையம் நகர்மன்ற கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ராஜபாளையம் நகர்மன்ற சாதாரணக் கூட்டம் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி செல்வசுப்பிரமணியராஜா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. ஆணையர் சசிகலா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் 6-ஆவது முறையாக முதல்வர் பொறுப்பேற்ற ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

     அதனை தொடர்ந்து நகராட்சி செலவினங்கள், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குமாரசாமி ராஜா பூங்கா ரூ.22.25 லட்சம் செலவிலும், சுபாஷ் சந்திரபோஸ் பூங்கா ரூ.38.90 லட்சம் செலவிலும், தமிழ்நாடு வீட்டு வசதி காலனி பூங்கா ரூ.22.50 செலவிலும் புதுப்பிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆர்ஆர் நகர் பகுதியில் 4 இடங்களில் ரூ.1 கோடியே 10 லட்சம் செலவிலும் கணபதியாபுரம் பகுதியில் 1 இடத்தில் ரூ.30 லட்சம் செலவிலும் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ள தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai