Enable Javscript for better performance
விருதுநகர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம் - Dinamani

சுடச்சுட

    

    விருதுநகர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கு விண்ணப்பம்

    By விருதுநகர்  |   Published on : 01st June 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விருதுநகர் சூலக்கரையில் உள்ள அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாணவ, மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என காப்பக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

     காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை: விருதுநகர் சூலக்கரையில் சமூக நலத்துறையின் கீழ் அரசு குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் ஐந்து வயது முதல் 10 வயதிற்குள்பட்ட மாணவர்கள், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் மற்றும் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு படிக்கும் மாணவர்கள் தங்கி படிக்கலாம்.

     காப்பகத்தில் அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கு கல்வி, உணவு, உறைவிடம், மருத்துவம், சீருடை, பாடக்குறிப்பேடுகள் மற்றும் காலணிகள் இலவசமாக வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று உயர்கல்வி பயிலும் மாணவிகளில் தொழிற்கல்வி படிப்போருக்கு ரூ. 50 ஆயிரம், பட்டப் படிப்பு பட்டய படிப்புக்கு ரூ. 30 ஆயிரம் அரசு சார்பில் கல்வி உதவி தொகை வழங்கப்படும்.

    பெற்றோரை இழந்த குழந்தைகள், தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், ஆயுள் கைதிகளின் குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்து கொளளப்படுவார்கள்.

     இவர்களது பெற்றோர், பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ. 24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai