சுடச்சுட

  

  விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 5,407 கோடி கடன் வழங்க இலக்கு: ஆட்சியர்

  By விருதுநகர்  |   Published on : 01st June 2016 12:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருதுநகர் மாவட்டத்தில் 2016-2017 ஆண்டுக்கான கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னுரிமை கடன்களுக்கான இலக்கு ரூ. 5,407 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே. ராஜாராமன் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

   விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான வங்கி மேலாளர்கள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதில், 2016-2017 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் வே.ராஜாராமன் வெளியிட இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் முதன்மை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி பெற்றுக்கொண்டார்.

   அதில் ஆட்சியர் பேசியதாவது: நபார்டு வங்கி மற்றும் ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி விருதுநகர் மாவட்டத்திற்கு 2016-17 ஆம் ஆண்டிற்கான கடன் திட்டம் தயாரிக்கப்பட்டுள் ளது. இதில் மொத்த முன்னுரிமைக் கடன்களுக்கான இலக்கு ரூ.5,407 கோடிகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த திட்டங்களுக்கான இலக்கு ரூ.2,172 கோடி அளவிலும், சிறு மற்றும் குறு தொழில் சார்ந்த கடன் திட்டங்களுக்கான இலக்கு ரூ.2,492 கோடி அளவிலும், கல்வி மற்றும் வீட்டுவசதி போன்ற பிற முன்னுரிமைக் கடன் திட்டங்களுக்கான இலக்கு ரூ.743 கோடி அளவிலும் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் திட்டம் சென்ற ஆண்டு கடன் திட்டத்தை விட சுமார் 19 சதவீதம் கூடுதல் என்றார்.

  இக்கூட்டத்தில் ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் எ.ராம்குமார், நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் ஜா.சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சுரேஷ், மகளிர் திட்ட இயக்குநர் பா.விஜயலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஜி.வெங்கடராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai