சுடச்சுட

  

  ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்.எல்.ஏ. நன்றி தெரிவிப்பு

  By ஸ்ரீவில்லிபுத்தூர்  |   Published on : 01st June 2016 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா செவ்வாய்க்கிழமை வீதி வீதியாகச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

   பேருந்து நிலையம், கூனங்குளம் தெருக்கள், ராமகிருஷ்ணாபுரம் தெருக்கள் உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுகளுக்கு நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் திறந்த ஜீப்பில் சென்று அவர் நன்றி தெரிவித்தார்.

   அவர் பேசும்போது, அனைத்து தரப்பு மக்களுக்கும் தமிழக முதல்வரின் நலத்திட்டங்கள் சென்றடைய பணிபுரிவேன். அனைத்து கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து பணிகள் நிறைவேற்றப்படும் என்றார்.

   அவருடன் கட்சியின் தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் சிந்து முருகன், கட்சியின் நகர் பொருளாளர் கருமாரி எஸ்.முருகன் உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai